இங்கலாந்தின் அப்போதைய பிரதமர் சர்ச்சில், சட்டசபையில் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார். உரை முடிந்ததும் உறுப்பினர்கிளின் கருத்தைக் கேட்டார்.கருத்துகள் எழுதி கொடுக்கப்பட்டது.எதிர்கட்சி உறுப்பினர் ஒருவர் கோபத்துடன் “முட்டாள்” என்ற எழுது கொடுத்தார்.
அதைப் படித்த சர்ச்சில், எந்தவிதக் கோபமும்மின்றி, “நான் சபையோரின் கருத்துகளைத்தான் எழுதி அனுப்ப சொல்லி இருந்தேன். யாரோ ஒருவர் தான் கருத்தை எழுதாமல் கையெழுத்து மட்டும் போட்டு அனுப்பியுள்ளார்.இதோ நீங்களே பாருங்கள்” என்று அவர் காகிதத்தைக் காட்ட, சபை முழுவதும் சிரிப்பலை பொங்கியது!!!