29.10.11

தமிழ் வாழ்கிறது!!! வளருகிறது!!!

தமிழ் எண் குறிகள் பற்றி என்  அன்பு தோழன் தமிழரசு எழுதிய ஒரு பதிவை படித்தேன். பழங்காலத்து தமிழர்களின் படைப்புகள் அவை. இது போன்ற சிலவற்றை என் தாத்தா சொல்ல கேட்டுள்ளேன். ஒவ்வரு எண்ணுக்கும் ஒரு சொல். சிலவை அழகாகவும் புதுமையாகவும் உள்ளன.

இந்த அளவு சிறிய (அதாவது 1/320, 1/160...) எண்களை கொண்டு வணிகம் நடந்துள்ளது. ஒரு ருபாய்க்கு 100 பைசா என்று நமக்கு தெளிவாக தெரியும். அது போல இந்த எண்களை பயன்ப்படுத்துவது சிரமம். இதை வைத்து தமிழர்கள் மூளைகாரர்கள் என்று கூறலாம். இது நிற்க.

இந்த எழுத்துகள் வழக்கொழிந்து இந்த கால கட்டத்தில், ஒரு நாடு மட்டும் தனது ரூபாய் நோட்டில் இந்த தமிழ் எண்களை சரிவர பயன்ப்படுத்துகிறது. ரொம்ப யோசிக்காதீர்கள். அந்த நன்நாடு மொரீஷியஸ். நியுதம்(லட்சம்) பேர் கொண்ட ஒரு அழகான குட்டி தீவு.

சரி. நான் சொல்வதற்கு ஆதாரமும் தருகிறேன்.
  (நோட்டின் கீழ் பகுதியில் ,வலது மூலையை பார்க்கவும்.)


 


அனைத்து தமிழ் எண்களும் சரிவர உள்ளன. சந்தேகம் இருந்தால் மீண்டும் இங்கு செல்க. என்ன சரியாக உள்ளதா?

அந்த நாட்டு அரசாங்கத்துக்கு என் பாராட்டுகள். இதை மேலும் தொடர்வார்கள் என நம்புகிறேன். நம் தமிழர் மறந்ததை இன்னும் பலர் மறக்கவில்லை.

தமிழ்நாட்டில் பிறந்து இன்னும் தமிழனாய் இருந்து தமிழை சுவாசிப்பதில் மீண்டும் மீண்டும் கர்வம் கொள்கிறேன்.

"கல் தோன்றி மண் தோன்றா காலத்தே, வாளோடு 
முன் தோன்றிய மூத்தகுடி தமிழ்க்குடி".


பி.கு: மேலும் அனைத்து நோட்டுகளையும் பார்வையிட.

3 comments:

Hai said...

நம்ம அரசியல்வியாதிகள் கொண்டுபோயி கொட்டி வச்சிருக்கிற பணத்துக்கு மரியாதையோ என்னவோ.

ஓஜஸ் said...

ஓ!!! இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். நான் இந்த கோணத்தில் சிந்தனை செய்ய வில்லை.

>ஆனால் தமிழ் போற்றிப் படுகிறது.... அது தான் முக்கியம்<

படித்து உங்கள் சிந்தனையை சொல்லியதற்கு நன்றி.

Anonymous said...

தமிழ் வாழ்க; தமிழ் வளர்க என்று நாம் சூளுரைக்கிறோம். அவர்கள் வாழவைக்கிறார்கள், வளர்க்கிறார்கள்