1.9.11

விநாயகர் சதுர்த்தி!!!
அப்பா ,பிள்ளையார் அப்பா: பக்தி கொடு, ஞாநம் கொடு,        வைராகியம் கொடு!!!  


வினைகளை தீர்க்கும் வினாயகா உன்னை வணங்குகிறேன்!!!


செட்டிநாட்டுக்கு சொந்தமான கற்பக விரிக்க்ஷமே: கற்பக கடவுளே உன்னை வாழ்த்துகிறேன்!!!


மாஹாபாரதம் எழுதியவனே உன்னை போற்றுகிறேன், அருணகிரிநாதரின் கவிதையால்

கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுகன் - அடிபேணிக்

காற்றிடு மடியவர் புத்தியி லுரைபவர்
கற்பக மெனவினை - கடிதேகும்

..................................................................
.........................................................

முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்
முற்பட வெழுதிய முதல்வோனே!

நர்தனமாடும் நாமசிவாயத்தின் மகனே: நன்மைகளை அருள்வாய்!!!இன்றோ விடுமுறை : அவல், பொரி, மோதகம் என பலவற்றை உனக்கு தந்து அதை பிரசாதமாக உண்டு மகிழ்கிறேன்!!!


இவரை மறந்த விட கூடாது. செல்வ விநாயகர். எங்கள் வீட்டின் நாயகர். கூடவே உள்ளார் எங்கள் சின்ன வீர விநாயகர்!!!


உன்னை வாழ்த்தி வேண்டி வணங்கி நிற்கிறேன்!!! அருள் செய்!!!

1 comment:

தமிழ் said...

தமிழ் மணம் வீசுகிறது!
தொடரட்டும் பணி .