27.11.11

விசித்திரம்!!!


சொல்வதற்கு ஒன்றும் இல்லை. இதை நம்பவும் முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.

ஒருவேளை நம் எண்களின் அழகை பார்த்து, சுட்டுவிட்டாங்களோ..... மன்னிப்போம் மறப்போம் - தமிழ் எண்களை அல்ல இதை திருடியவர்களை

நான் தமிழன்டா, என்று கத்த தோணுகிறது.

மேலும் படிக்க:

பட உதவி: யாரோ ஒரு ட்விட்டர் நண்பர் (மன்னிக்கவும் பெயரை மறந்துவிட்ட்டேன்). நன்றிகள்.


24.11.11

இலவசங்கள் - வைரமுத்து

இலவசத்தில் வாழப் பழகியவர்கள்
மதுரசத்தில் மூழ்கிப் போனார்கள்.

உழைத்த தலைமுறை உளுத்த தலைமுறை
ஆக்கப் பட்டு விட்டது.

துய்ப்புக் கலாசாரம் உழைக்கும் நேரத்தை
உறிஞ்சி விட்டது.

உழைக்க முடியாத ஊனமுற்றவர்களுக்கும்,
கைவிடப்பட்ட முதியவர்களுக்கும்,
அநாதைக் குழந்தைகளுக்கும்,
ஆதரவற்ற நோயாளிகளுக்கும் தானே
இலவசம் பொருந்தும் ?

உற்பத்தி பெருக்காத இலவசம்
உற்பாதம் தானே விளைக்கும் ?

மதுக்கடை வாசல்களில் -
தவணை முறையில் செத்துக்
கொண்டிருக்கிறார்கள்
நம் விவசாயத் தொழிலாளிகள்.

மது என்பது உலகக் கலாசாரம் தான்.
ஒழிக்க முடியாது தான்;
மனித சமுதாயத்தின் பழம் பானம் தான்.

ஆனால் -
அருந்துபவனுக்கும் -
அருந்தப்படுவதற்குமான இடைவெளியில்
இருக்கிறது மதுவின் நன்மை – தீமை.
பெரும்பாலும் -
மேட்டுக்குடி மக்கள் மதுவை அருந்துகிறார்கள்.
ஆனால் உழைக்கும் மக்களை – மது அருந்துகிறது.

மேல் தட்டு மக்களின் உபரிப் பணத்தில்
கை வைக்கும் மது -
அடித்தட்டு மக்களின் -
உணவுப் பழக்கத்திலேயே கை வைக்கிறது.

தங்களுக்கு எதிராய் இந்தியர்கள்
கத்தி ஏந்தி விடக்கூடாது என்பதற்காகத் தான்
கள்ளுக்கடை திறந்தார்கள் வெள்ளையர்கள்.

புட்டிக்குள் அடக்கி வைத்திருந்தார்கள் -
தங்களுக்கு எதிரான பூதத்தை.
ஜனநாயக நாட்டில் -
பூதம் மட்டும் இன்னும் புட்டிக்குள்ளேயே
இருக்கிறது.

நன்றி : வைரமுத்து

21.11.11

௩(3) முடிச்சுக்கு.....

௩(3) முடிச்சுக்கு முன்
காதல் கனிந்த இரண்டு உயிர், ஓர் உடல் கொண்ட காதலர்களின் கல்லியாணத்தைப் பற்றிய பிதற்றல்கள் இங்கு.

ஆண் - அப்பாடா. இதற்கு மேலும் பொறுக்க முடியாது.
பெண் - நீ என்னை விட்டு பிரியப் போகிறாயா?
ஆண் - இல்லை. அதை பற்றி சிந்தனையே இல்லை
பெண் - நீ என்னை காதலிக்கிறாயா
ஆண் - கண்டிப்பாக,முப்பொழுதும்!!!
பெண் - இதுவரை நீ என்னை ஏமாற்றி உள்ளாயா?
ஆண் - இல்லை.நீ இதை கேட்க தான் வேண்டுமா?
பெண் - நீ எனக்கு முத்தம் தருவாயா....
ஆண் - சந்தர்ப்பம் கிடைக்கும் போழுதெல்லாம்....
பெண் - நீ என்னை அடிப்பாயா?
ஆண் - ஐஐயோ இல்லை! உனக்கு என்ன பைத்தியமா...
பெண் - நான் உன்னை நம்பலாமா?
ஆண் - எஸ்.
பெண் - என்னவனே என் இனியவனே ........

௩(3) முடிச்சுக்கு பின்
மேல் உள்ளதை தலைகீழாக (கடைசி ஆரம்பித்து முதல் வரை) படிக்கவும்.

பி.கு- சிரிக்க மட்டும். இது நம் நாட்டிற்கு பொருந்தாது, என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை. இருந்தாலும் நாம் சின்னதிரை சீரியல்களில் வருவன போல உள்ளது. பயப்பட வேண்டம், இது சொந்த சரக்கு அல்ல: சுட்டதுதான்.

12.11.11

இனியும் காதல் தேவையா?


இளைஞர்கள் அவர்களுக்கு காதலி இல்லை என்று ஏங்குகின்றனர். ஆனால், காதல் இல்லாமல் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்தால் இவர்கள் தங்களது ஆசையை விட்டுவிடுவார்கள்.

v பொய் சொல்வதை 90% குறைக்கலாம்
v நமது நேரம் மீதமாகும்.
v நன்றாக இரவில் நித்திரை கொள்ளலாம்.
v மிஸ்ட் கால் வந்தால் அதை பற்றிக் கவலை பட தேவையில்லை
v எந்த ஹோட்டலிலும் சாப்பிடலாம்.
v எப்படி வேணுமானாலும் உடை உடுத்தலாம்.
v நாள்ளிரவில் எஸ்.எம்.எஸ் வந்து தூக்கம் கலையாது.
v நல்ல கனவுகளை (டூயட் இன்றி) காணலாம்
v எல்லா பெண்கள்கலோடும் கதை அளக்கலாம், பழகலாம்.
v உங்கள் செல்பேசி பில் கூடி, தொடர்பு துண்டிக்கப்படாது.
v இங்கே வா, அங்கே வா என்ற தொல்லை இருக்காது.
v அழகான காதல் கவிதை எழுதலாம் (நல்ல காதல் கவிதை எழுத்தும் பெரும்பாலானோர் காதலித்து இல்லை)
v பணம் மிச்சமாகும்.
v தேவதாஸாக வாப்புக்கள் கம்மி.
v வேலையை சிரத்தையுடன் செய்யலாம்
v நாலு நல்ல வார்த்தைகளைப் படிக்கலாம்
v காதல் காவியங்களை ரசித்து ருசித்து படிக்கலாம்
v பெற்றோர் நிம்மதிக்கு, மரியாதை கொடுக்கலாம்
v இஷ்டம் போல ஆடலாம்

பி.கு: எனக்கு ஒரு அழகான அட்டகாசமான காதலி இருக்கிறாள் என்பதை பெருமையுடன் சொல்லி கொள்ள விரும்புகிறேன்.

நன்றி: ஒரு பத்து மட்டும் சுட்டது. மீதம் அனுபவித்த சொந்த சரக்கு.

6.11.11

இருக்கா இல்லையா...


கண்ணா தப்ப தட்டி கேக்க ஆசையா?????????

உங்க ஊரு நியாய விலை கடை , அதான் பா "ரேஷன் கடை" ல இருக்க அங்கிள்/ஆண்ட்டி ஸ்டாக் முடிஞ்சி போச்சின்னு சொல்றாங்களா?..

அவங்க பொய் சொல்றாங்கன்னு நீங்க/ஊர்ல வேற யாரும் நினைக்கிறாங்களா? ..வாங்க பாத்துடுவோம்.


உங்க மொபைல் ல இருந்து
[PDS] [மாவட்டகுறியீடு] [கடைஎண்]
//உதாரணத்துக்கு PDS 10 AA001
(இங்க 10 சேலம் மாவட்ட எண்,AA001 கடை எண்)
அப்படின்னு டைப் பண்ணி 9789006492, 9789005450
இந்த ரெண்டு நம்பர் ல எதாச்சும் ஒண்ணுக்கு அனுப்புங்க.
உங்களுக்கு தகவல் உடனே கிடைக்கும்.

#மாலை 5 மணிக்குள்ள அனுப்ப முயற்சி பண்ணுங்க..

அப்புறம் என்ன நீங்களும் ரமணா தான்..

மேலும் தகவலுக்கு இந்த வலைபக்கத்தை பாருங்க..
http://www.consumer.tn.gov.in/view_detail.asp?alertid=70

நன்றி: VEERA RAJ

எச்சரிக்கை : நான் இன்னும் இந்த முறையை பயன்படுத்தி பார்க்கவில்லை. ஒரு வேலை இது ஏட்டு சுரக்காயாக கூட இருக்கலாம்.