29.10.11

தமிழ் வாழ்கிறது!!! வளருகிறது!!!

தமிழ் எண் குறிகள் பற்றி என்  அன்பு தோழன் தமிழரசு எழுதிய ஒரு பதிவை படித்தேன். பழங்காலத்து தமிழர்களின் படைப்புகள் அவை. இது போன்ற சிலவற்றை என் தாத்தா சொல்ல கேட்டுள்ளேன். ஒவ்வரு எண்ணுக்கும் ஒரு சொல். சிலவை அழகாகவும் புதுமையாகவும் உள்ளன.

இந்த அளவு சிறிய (அதாவது 1/320, 1/160...) எண்களை கொண்டு வணிகம் நடந்துள்ளது. ஒரு ருபாய்க்கு 100 பைசா என்று நமக்கு தெளிவாக தெரியும். அது போல இந்த எண்களை பயன்ப்படுத்துவது சிரமம். இதை வைத்து தமிழர்கள் மூளைகாரர்கள் என்று கூறலாம். இது நிற்க.

இந்த எழுத்துகள் வழக்கொழிந்து இந்த கால கட்டத்தில், ஒரு நாடு மட்டும் தனது ரூபாய் நோட்டில் இந்த தமிழ் எண்களை சரிவர பயன்ப்படுத்துகிறது. ரொம்ப யோசிக்காதீர்கள். அந்த நன்நாடு மொரீஷியஸ். நியுதம்(லட்சம்) பேர் கொண்ட ஒரு அழகான குட்டி தீவு.

சரி. நான் சொல்வதற்கு ஆதாரமும் தருகிறேன்.
  (நோட்டின் கீழ் பகுதியில் ,வலது மூலையை பார்க்கவும்.)


 


அனைத்து தமிழ் எண்களும் சரிவர உள்ளன. சந்தேகம் இருந்தால் மீண்டும் இங்கு செல்க. என்ன சரியாக உள்ளதா?

அந்த நாட்டு அரசாங்கத்துக்கு என் பாராட்டுகள். இதை மேலும் தொடர்வார்கள் என நம்புகிறேன். நம் தமிழர் மறந்ததை இன்னும் பலர் மறக்கவில்லை.

தமிழ்நாட்டில் பிறந்து இன்னும் தமிழனாய் இருந்து தமிழை சுவாசிப்பதில் மீண்டும் மீண்டும் கர்வம் கொள்கிறேன்.

"கல் தோன்றி மண் தோன்றா காலத்தே, வாளோடு 
முன் தோன்றிய மூத்தகுடி தமிழ்க்குடி".


பி.கு: மேலும் அனைத்து நோட்டுகளையும் பார்வையிட.

15.10.11

யம தர்பார்...


உங்களுக்கு கலியாணம் ஆகிவிட்டதா........ ~இல்லையா. ஐஐயோ இதை சீக்கிரம் படியுங்கள். ~ஆகிவிட்டதா. உங்களுக்கு ஒரு நல்ல செய்தி, மேலே வாசுயுங்கள். ~இரண்டாம் கலியாணமா, மாட்டிகொண்டீங்கள், உங்களுக்கு அதிர்ச்சி மட்டும் மிச்சம்.

(இதை எல்லாம் சொல்ல உனக்கு என்ன தகுதியுள்ளது என்று கேட்காதீர்கள். என் நாயகன் கல்கி சொல்லியதை தான் சொல்கிறேன். இது நிற்க.)    

மூன்று மனிதர்களுடைய ஆவி ஒரே சமயத்தில் யமனுடைய சந்நிதானத்தை அடைந்தன.



முதல் ஆவி பூலோகத்தில் பிரம்மசாரியாகவே இருந்து இறந்தவனுடையது. அவனைப் பற்றி விவரம் சித்திர குப்தன் அறிவித்ததும், யமன் இவன் பூலோகத்தில் கஷ்டமே அனுபவியாதவன்; ஆகையால் இவனை இங்கே நரகத்தில் போடு என்றான்.

அடுத்த ஆவி ஒரு கிரஹச்தனுடையது. ஐயோ பாவம்!!! உலகத்தில் கலியாணம் செய்து கொண்டு வெகு கஷ்டப்பட்டிருக்கிறான். இங்கேயாவது சுகமாக இருக்கட்டும், சொர்கத்துக்கு அனுப்பு என்றான் யமன்.

இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த மூன்றாவது ஆவி, யமதர்ம ராஜனே! நான் பூலோகத்தில் இரண்டு தடவை கலியாணம் செய்துகொண்டு ரொம்ப கஷ்டம் அனுபவித்தவன் என்று முறையிட்டான். உடனே யமன் வெகு கோபத்துடன், அடே முட்டாள்! ஒரு தடவை கலியாணம் செய்துகொண்டு கஷ்டப்பட்ட பின், இரண்டாம் தடவையும் கலியாணம் செய்து கொண்டாயா? இப்படிப்பட்ட மூடனுக்குச் சொர்க்கத்தில் இடம் எது? போடு இவனைக் கொடிய நரகத்தில்! என்று கட்டளையிட்டான்.

(யமனோடு சந்திப்பு எங்கு வரும், எப்படி வரும், எப்பொழுது வரும், எப்படி இருக்கும் என்பதை எம்பெருமான்தான் அறிவான். அதை எல்லாம் சற்றே  மறந்து சிரியுங்கள் J)

நன்றி: கல்கியின் கட்டுரை கலியாணாம்

("அட பாவி!!! உனக்கு சொந்தமாக கதை, கட்டுரை, கவிதை, பதிவு  எழுதவராதா...... நீ ஒரு பேத்தல். உன் கிறுக்கல்கள் தாங்க முடிலய." என்ன செய்வது மஹாஜனங்களே : முற்றிய கலி காலம்)

14.10.11

காதல்


காதல் என்றால் என்ன?

அதை பற்றி சொல்ல எனக்கு அனுபவம் பத்தாது (ஏனெனில் இப்போது தான் என்னவளை சந்தித்துள்ளேன்!!!). நமக்கு எதையுமே பிறர் விளங்க சொல்லி கேட்பதே வழக்கம்.இந்த முறை அந்த வாய்ப்பை தட்டி செல்பவர் வ.வெ.சு.ஜயர்.(போதும் பேத்தல், கேட்கிறது). இப்பொழுது சமத்தாக , காதல் பாடம் கேளுங்கள்

கண் எல்லோரையும் பார்க்கிறது; காது பேசுவோர் வார்த்தைகளையெல்லாம் கேட்கிறது; வாய் காரியம் இருக்கிறதோ இல்லையோ பலரிடத்திலும் பேசுகிறது. ஆனால் கண்ணானது ஒருவரைப் பார்க்கும்போது, மற்ற யாரைப் பார்க்கும்போது அடையாத இன்பத்தை அடைகிறது. அவர் பேசுவது சாமானிய விஷையமானாலும், அவருடைய குரலில் வீசேஷமான இனிமை இராவிட்டாலும், அவருடைய வார்த்தயைக் காது தேவாமிரிதத்தைப் பருகுவது போலப் பருகுகிறது. அவரடத்தில் பேசும்போது வாய் குளருகிறது.; நாக்குக் கெஞ்சுகிறது; இதெல்லாம் காதலின் அடையாளம். ஆனால் இக் காதல் எப்படிப் பிறக்கிறது என்றாலோ, அது தேவ ரகசியம் மனிதரால் சொல்ல முடியாது!!!

உங்களுக்கும் இது போல காதலின் அடையாளம் அல்லது காதலை பற்றி சொல்ல ஏதேனும் இருந்தால் சொல்லுங்கள். இளைஞர்களுக்கு முன்னுரிமை. (போய் பொழப்ப பாருங்க தம்பி!!!). நல்ல கருத்துகள் பதிவாக்கப்படும்.(ஹ ஹ ஹா!)          

நன்றி: கல்கியின் கட்டுரை கலியாணம்.  

13.10.11

இரவை ‘நைட்’ என்றாய்!

உணர்ச்சிகளை ஒருங்கே அள்ளிக்குவித்து,ஒவ்வொருவனையும் விளிப்படையச்செய்யும் வீர வரிகளுக்கு சொந்தக்காரர் கவிஞர் காசிஆனந்தன். அவரது கவி வரிகளால் உணர்வு
பெறாதவர்கள் எவரும் இருக்க முடியாது.அப்படியிருந்தால் அவன் உணர்வற்றவனாகவே
இருப்பான்.

எம் இன் தமிழுக்குள் மாற்றான் மொழி புகுந்து ஆட்டுவிக்கிறது.தமிழை பேச
வெட்கப்படும் தமிழனும் இருக்கத்தான் செய்கிறான் எம்முள், ஆனாலும் எம் உணர்ச்சிக் கவிஞரின் "தமிழா நீ பேசுவது தமிழா?" என்ற கவி வரிகள் அவனை வெட்கித்தலை குனிய வைக்கும் என்பது திண்ணம். எல்லா மொழியையும் பேசுவோம் ! தமிழ் மொழியை கலப்பில்லாமல் பேசுவோம்.இதோ என்னை உலுப்பிய வீர வரிகள்.

தமிழா!
நீ
பேசுவது தமிழா?


அன்னையைத் தமிழ்வாயால்
‘மம்மி’ என்றழைத்தாய்…
அழகுக் குழந்தையை
‘பேபி’ என்றழைத்தாய்…
என்னடா, தந்தையை
‘டாடி’ என்றழைத்தாய்…
இன்னுயிர்த் தமிழை
கொன்று தொலைத்தாய்…

தமிழா!
நீ
பேசுவது தமிழா?

உறவை ‘லவ்’ என்றாய்
உதவாத சேர்க்கை…
‘ஒய்ப்’ என்றாய் மனைவியை
பார் உன்றன் போக்கை…
இரவை ‘நைட்’ என்றாய்
விடியாதுன் வாழ்க்கை
இனிப்பை ‘ஸ்வீட்’ என்றாய்
அறுத்தெறி நாக்கை…

தமிழா!
நீ
பேசுவது தமிழா?

வண்டிக்காரன் கேட்டான்
‘லெப்ட்டா? ரைட்டா?’
வழக்கறிஞன் கேட்டான்
என்ன தம்பி ‘பைட்டா?’
துண்டுக்காரன் கேட்டான்
கூட்டம் ‘லேட்டா?’
தொலையாதா தமிழ்
இப்படிக் கேட்டா?

தமிழா!
நீ
பேசுவது தமிழா?

கொண்ட நண்பனை
‘பிரண்டு’ என்பதா?
கோலத் தமிழ்மொழியை
ஆங்கிலம் தின்பதா?
கண்டவனை எல்லாம்
‘சார்’ என்று சொல்வதா?
கண்முன் உன் தாய்மொழி
சாவது நல்லதா?

தமிழா!
நீ
பேசுவது தமிழா?

பாட்டன் கையில
‘வாக்கிங் ஸ்டிக்கா’
பாட்டி உதட்டுல
என்ன ‘லிப்ஸ்டிக்கா?’
வீட்டில பெண்ணின்
தலையில் ‘ரிப்பனா?’
வெள்ளைக்காரன்தான்
உனக்கு அப்பனா?

தமிழா!
நீ
பேசுவது தமிழா?

நன்றி: நல்லறம்!-Wordpress Blog

10.10.11

#GreenLies #2


முதல் பதிவில் உங்களிடம் இருந்த வரவேற்ப்பை முன்னிட்டு , இந்த பொய்களின் தொகுப்பு தொடர்கிறது. தீட்டியவர்களுக்கு நன்றி!!!
இன்னும் #GreenLies இருந்தால் கமெண்டாக எழுதுங்கள்



8.10.11

#GreenLies


சிரிக்க சந்திக்க!!!

#GreenLies (பச்சை புளுகுகள்). ஒரு மணி நேரத்தில் தமிழர்களால் ட்வீட்டரில் ட்ரெண்ட (Trend) செய்யப்பட்ட வஸ்து . ஆச்சரியம் என்னவென்றால் இது நம்பர் ஒன் ட்ரெண்டிங். எனவே இதை மறக்காமல் இருப்பதற்கு ஒரு பதிவு!!!

அப்பப்பா எத்தனை வகையான பொய்கள். இதில் சிறப்பு அம்சம் , நாம் இது அனைத்தையும் அன்றாட வாழ்க்கையில் நாம் பயன்படுத்தி வருகிறோம். இந்த பொய்களை சில பிரிவுகளாக பிரிக்கலாம். எனக்கு தெரிந்தவைகளை இங்கே சொல்ல வேண்டும் என்று ஆசை. ஆனால் அது பெரிய பட்டிலாயகயுள்ளது (#GreenLies #சோம்பல்). இதை தலைப்பாக கொண்டு ஒரு பி.கெஷ்.டீ பண்ணலாம் என்றால் பார்த்துக்கோங்களேன்.

நான் ட்வீட்ரில்லிருந்து சில சாம்பிள்களை மட்டும் தருகிறேன். வாசியுங்கள். சிந்தியுங்கள். சேருங்கள் ( இன்னும் நல்ல பொய்களை கமென்டாக எழுதுங்கள், இல்லை மின்னஞ்சல் செய்யுங்கள்!!!. )
--------------------------------------------------------------------------------------------

Democracy for the people . by the people, of the people #GreenLies

ஆபிஸ்ல ரொம்ப வேலை!! #GreenLies

நான் அப்பவே அவங்கிட்ட வேண்டாம்னு சொன்னேங்க... அவன்தான் கேக்கல... #GreenLies

மாப்ள மொபைலில் சார்ஜ் இல்லைடா அப்பறமா கூப்பிடுறேன் #GreenLies

தேதி கிழிக்கிறப்போவே முடிவு பண்ணிடுவேன். இன்னிக்கு எதாச்சும் உருப்படியா கிழிக்கணும்னு.. #GreenLies

பிட்டா? அப்படினா?! #GreenLies

எங்க பிரச்சனை நடந்தாலும் தேடி வந்து வேடிக்கை பார்க்கவே மாட்டார் :-) #GreenLies

இந்த டபுள் மீனிங் டுவீட்டுகளே எனக்கு புடிக்காதுப்பா! #GreenLies

My semester exam answer sheet #GreenLies

என் வாழ்க்கைல வந்த முதல் பெண் நீ தான்!! #GreenLies

மச்சி அவ உன்னயே பாத்துட்டு இருக்காடா... #GreenLies

இல்ல மச்சி!அவதாண்டா என்னயே பார்த்துகிட்டே இருக்கா!#GreenLies

இப்பலாம் facebook பக்கம் போரதே இல்ல மச்சி. எப்ப பாத்தாலும் பத்து friend request, இல்லனா chatல மொக்க போடுரானூங்க. #GreenLies

Am using online tools like twitter to be productive #GreenLies

சொல்லுடா செல்லம் அப்பாகிட்ட பேசிக்கிட்டு இருந்தேன்! #GreenLies

நேத்து கால் பண்ணினேன் மச்சி... உன் லைன் பிஸியாவே இருந்துச்சு... நெட்வொர்க் பிரப்ளம்ன்னு நினைக்கிறேன் #GreenLies

சைலண்ட்ல போட்டுருந்தனா! கவனிக்கல! இப்பதான் பாத்தேன் 3 மிஸ்ஸுடு காலு! சாரி மச்சி #GreenLies

நல்லா தான் படிச்சேன், கேள்வியை பார்த்தவுடன் எல்லாம் மறந்து போச்சு. # GreenLies

நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க # GreenLies

எங்கம்மா கூட இந்த அளவுக்கு சமைச்சதில்லடி செல்லம் #GreenLies

Assignemnt-டை மறந்து வீட்லே/ஹாஸ்டல்ல வச்சிட்டு வந்துட்டேன் #GreenLies


நான் கண்டிப்பா நல்லா படிச்சு, அடுத்த செமஸ்டர்ல நல்ல மார்க் வாங்குவேன் #GreenLies

உன் முத்தம் தான் எனக்கு முதல் முத்தம் #GreenLies

நான் இனிமேல் மொக்கை போட மாட்டேன்!!! #GreenLies

என் காதலி தான் உலகத்திலேயே அழகான பெண் #GreenLies

we are just friends #GreenLies 

என்னோட வெற்றிக்கு காரணம் என் மனைவிதான் #GreenLies

தரகர்: பொண்ணு பார்க்க மகாலட்சுமியாட்டம் இருப்பா #GreenLies 

As i am suffering from fever i am not attending SCHOOL Today #GreenLies

அடுத்த செமெஸ்டர்ல கிளியர் பண்ணிடுவேன்! #GreenLies 

ஹலோ ஹலோ சிக்னல் சரியா கடைக்கலயே........ நான் அப்புரம் PHONE பண்ணறேன்!!! #GreenLies

நான் பிஸியா இருக்கும்போது இந்தமாதிரி நல்ல ட்ரெண்ட ஆரம்பிக்கிறது கொடுமை! #GreenLies

என் மாமியார் எனக்கு அம்மா மாதிரி #GreenLies

எனக்கு கோவமே வராது #GreenLies

என் சமையல்னா எங்க வீட்டில் எல்லாருக்கும் உயிர்#GreenLies

நான் கிழிச்ச கோட்டை என் பொண்ணு தாண்டவே மாட்டா #GreenLies

நான் dietல இருக்கேன் #GreenLies

நான் எது செஞ்சாலும் எங்க வீட்டுகாரர் கிட்ட கேட்டு தான் செய்வேன் #GreenLies

எங்க அம்மா தான் உலகத்திலேயே best , என் பொண்ணு அடிகடி சொல்லும் #GreenLies

****நான் இந்த ட்வீட்யுடன் ட்வீட் செய்வதை நிறுத்த போகிறேன் #GreenLies

**** அட பாவிங்களா எல்லாரும் இப்படி பொய் பொய்யா சொல்றீங்களே நான் பொய்யே சொல்ல மாட்டேன்பா ! #GreenLies


****ரொம்ப பொய் சொல்ல முடியல!!! NEXT REST!!! விடைபெருகிறேன்!!! #GreenLies
--------------------------------------------------------------------------------------------

உனக்கு எதற்கு இந்த தொகுப்பாசிரியர் (கொஞ்சம் ஓவர் இல்லை) வேலை என்று நீங்கள் கேட்ப்பது என் காதில் விழுகிறது. 
காரணங்கள்:
1. எல்லாம் ஒரு டைம் பாஸ் தான்.
2. விடுமுறை முன்னிட்டு பல நண்பர்கள் சொந்த ஊருக்கு சென்றுள்ளார்கள். அவர்கள் பாவம். அவர்களும் இதை படித்து ரசிக்க. (ரொம்ப அக்கரை பாரு) 
3.பதிவு எழுதி பல நாட்கள் ஆகி விட்டது.
4.மொக்கை போடுவது. (Y Blood, Same Blood)
5.ப்ளாகுக்கு பாலோவர்ஸ் சேர்ப்பதற்கு
6.நானும் கிறுக்குகவேன் என்று காட்டுவதற்கு.
7.ஏதோ எழுதணும்னு தோணிச்சு.
(போதும் டா நிறுத்து!!!!)
மற்றும் பல : etc. (அப்படினா..........)  

எனது கருத்து: ட்வீட்டர் சர்ச்சில் "GreenLies" தேடினேன்!!! அனைத்தும் தமிழ்தான்!!! நல்லா பொய் சொல்லறாங்கபா தமிழர்கள்!!! #என்னையும்_சேர்த்து  


எச்சரிக்கை: இந்த ட்வீட்ஸ் அனைத்தும் நான் எழுதியது அல்ல (இது எங்களுக்கு முன்னாடியே தெரியாது பாரு!!!). இதை தீட்டியவர்களுக்கு நன்றி!!! குறிப்பாக நன்றி சொல்லாதற்கு மன்னிக்கவும்!!! 

இன்னும் நண்பர்களின் உதவியுடன் பல பொய்கள சேர்ந்தால், அடுத்த பதிவு வரும் (இத்து நிச்சியம் நடக்கும்)!!!!

(சரி சரி அழுவதை நிறுத்தங்கள்).