15.10.11

யம தர்பார்...


உங்களுக்கு கலியாணம் ஆகிவிட்டதா........ ~இல்லையா. ஐஐயோ இதை சீக்கிரம் படியுங்கள். ~ஆகிவிட்டதா. உங்களுக்கு ஒரு நல்ல செய்தி, மேலே வாசுயுங்கள். ~இரண்டாம் கலியாணமா, மாட்டிகொண்டீங்கள், உங்களுக்கு அதிர்ச்சி மட்டும் மிச்சம்.

(இதை எல்லாம் சொல்ல உனக்கு என்ன தகுதியுள்ளது என்று கேட்காதீர்கள். என் நாயகன் கல்கி சொல்லியதை தான் சொல்கிறேன். இது நிற்க.)    

மூன்று மனிதர்களுடைய ஆவி ஒரே சமயத்தில் யமனுடைய சந்நிதானத்தை அடைந்தன.



முதல் ஆவி பூலோகத்தில் பிரம்மசாரியாகவே இருந்து இறந்தவனுடையது. அவனைப் பற்றி விவரம் சித்திர குப்தன் அறிவித்ததும், யமன் இவன் பூலோகத்தில் கஷ்டமே அனுபவியாதவன்; ஆகையால் இவனை இங்கே நரகத்தில் போடு என்றான்.

அடுத்த ஆவி ஒரு கிரஹச்தனுடையது. ஐயோ பாவம்!!! உலகத்தில் கலியாணம் செய்து கொண்டு வெகு கஷ்டப்பட்டிருக்கிறான். இங்கேயாவது சுகமாக இருக்கட்டும், சொர்கத்துக்கு அனுப்பு என்றான் யமன்.

இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த மூன்றாவது ஆவி, யமதர்ம ராஜனே! நான் பூலோகத்தில் இரண்டு தடவை கலியாணம் செய்துகொண்டு ரொம்ப கஷ்டம் அனுபவித்தவன் என்று முறையிட்டான். உடனே யமன் வெகு கோபத்துடன், அடே முட்டாள்! ஒரு தடவை கலியாணம் செய்துகொண்டு கஷ்டப்பட்ட பின், இரண்டாம் தடவையும் கலியாணம் செய்து கொண்டாயா? இப்படிப்பட்ட மூடனுக்குச் சொர்க்கத்தில் இடம் எது? போடு இவனைக் கொடிய நரகத்தில்! என்று கட்டளையிட்டான்.

(யமனோடு சந்திப்பு எங்கு வரும், எப்படி வரும், எப்பொழுது வரும், எப்படி இருக்கும் என்பதை எம்பெருமான்தான் அறிவான். அதை எல்லாம் சற்றே  மறந்து சிரியுங்கள் J)

நன்றி: கல்கியின் கட்டுரை கலியாணாம்

("அட பாவி!!! உனக்கு சொந்தமாக கதை, கட்டுரை, கவிதை, பதிவு  எழுதவராதா...... நீ ஒரு பேத்தல். உன் கிறுக்கல்கள் தாங்க முடிலய." என்ன செய்வது மஹாஜனங்களே : முற்றிய கலி காலம்)

No comments: